பதிவிறக்கம்
ஐ-ட்யூன்ஸ் - iTunes
சமீபத்தியப் பதிப்பு 12.7.5.9
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

ஐ-ட்யூன்ஸ் - iTunes புதிய பதிப்பு12.7.5.9

ஐ-ட்யூன்ஸ் - iTunes
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

ஐ-ட்யூன்ஸ் - iTunes 12.7.5.9
அனைத்துப் பெரிய வர்த்தகக்குறி கொண்ட நிறுவனங்களும், அவர்களை அடையாளப்படுத்தும் ஒரு சிறிய மென்பொருள், வன்பொருள் அல்லது இரண்டும் இணைந்த ஒருபொருள் தங்களைத் தனிப்படுத்திக் காட்டுவதையே விரும்புகிறார்கள். அவை கொடிவாகனமாகத் திகழும் பொருட்கள் மட்டும் அல்ல. அந்த நிறுவன வர்த்தகக்குறியைக் கேட்ட மாத்திரத்தில் உலகம் இந்தப் பொருள்களையே நினைவு கொள்கிறது.

உதாரணமாக மைக்ரோசாஃப்ட் என்றால் சாளர இயங்குதளம். கூகுள் என்றால் தேடுபொறி. அதேபோல் ஆப்பிளுக்கு ஐ ட்யூன்ஸ். ஆப்பிள் ஒரு நிறுவனமாக மிகப்பெரிய வர்த்தகக்குறி கொண்டது மட்டுமில்லாமல் அது மற்றெல்லா நிறுவனத்தையும் விட அதிக வருவாய் ஈட்டும் நிறுவனம். அதனால் இதுவரை ஆப்பிள் நிர்மாணித்தது எல்லாமே மிகப்பெரியதாகவே இருந்தது. ஐ-ட்யூனும் அதேபோல்தான்.

இதற்குக் காரணமில்லாமலில்லை.,
ஐ-ட்யூன் இந்த வகை பயன்பாட்டு மென்பொருட்களில் முதன்மையானதாகும். அது ஒரு ஊடக இயக்கி. இசை மற்றும் அசைபடங்களை இயக்கக்கூடிய ஒரு உபகரணம் என்று சொல்வதை விட அதை ஒரு ஊடக மையம் மற்றும் சில்லறை வணிக மையம் என்று சொல்லலாம். அதனால்தான் ஆப்பிள் என்று சொன்னாலே, , மக்கள் நினைவுக்கு வருவதாக ஐ-டியூன்ஸ் பெரியதானது.

மென்பொருள் விமர்சனம்

இசை மற்றும் எண்ணிம அசைபட நிர்வாக மென்பொருள்.

ஐடியூன்ஸ் போட்டியே இல்லாத மென்பொருள். சந்தையில் இது ஏன் மிகச்சிறந்த ஊடக இயக்கி மற்றும் ஊடக மையம் என்பதை எளிதாகச் சொல்லலாம். இது வசதியில் செழுமையான, இலகு இயக்க, சாளர இயங்குதளத்திலும், ஆப்பிள் மேக் இயங்குதளத்திலும் வேலைசெய்யும் மென்பொருள். இதை நிறுவுவது எளிது, இயக்குவது அதனிலும் எளிது.

ஆப்பிள் நிறுவனம் “பொருத்து-உடன்-இயக்கு” வகை மென்பொருட்களை உண்டாக்குவதிலும், அனைவரும் எளிதில் கையாண்டு நிபுணத்துவம் பெரும் பொருட்களையும் படைப்பதில் பெயர்பெற்றது. ஐ-டியூன்ஸூம் இதற்கு விலக்கல்ல. அப்படியும் உங்களுக்கு சிறிது தயக்கமிருக்கும் என்றால் மென்பொருள் நிறுவலின் இறுதிப் பகுதியில் தனிப்பயிற்சி பாடம், மென்பொருள் உபயோகத்தில் உங்களை வழிநடத்தி ஐ-டியூன்ஸ் சூழலை முழுமையாக உங்களுக்கு அறிமுகப்படுத்தும்.

ஐ-டியூன்ஸ் நளினமானது. வேகமானது, இதன் மூலம் உங்களின் இசைக்கோவைகளைக் கேட்கலாம். திரைப்படங்களைப் பார்க்கலாம். வானொலி கேட்கலாம். அதோடு புதிய ஊடகக் கோப்புகளை சரளமாகவும் வேகமாகவும் வாங்கலாம். இத்தனைச் செயல்களில் எந்தச் செயலிலிருந்தும் மற்றொன்றிற்குச் சட்டென மாறலாம். அதுமட்டுமில்லாமல் ஒன்றிற்கு மேற்பட்டச் செயல்களை ஒரே சமயத்திலும் செய்யலாம். இசை கேட்டுக்கொண்டே வாங்கலாம். கூடவே திரைப்படத்தை தனிப்பெட்டியில் வெளியெடுத்து அதனை மற்றச் செயல்களைச் செய்து கொண்டே ரசிக்கலாம்.

ஐ-டியூன்ஸின் ஊடக அங்காடி உலகப் புகழ் பெற்றது. அதன் போட்டியாளர்களை விட மிகமிக அதிகமான இசை, திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சேகரிப்பு இதில் உள்ளது. மேலும் இங்கிருந்து நீங்கள் வாங்கிப் பதிவிறக்குகின்ற கோப்புகள் அல்லது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் பதிவேற்றும் கோப்புகள் உடனடியாக பட்டியிலடப்பட்டு விடுகின்றன, உங்கள் கணினியில் தெரியாத ஒரு இசைக் கோப்பு இருந்தால், ஐ-ட்யூன் உடனே அந்தப் பாட்டின் தலைப்பு, அதைப் பாடியவர், எப்போது பாடப்பட்டது, எந்த இசைக்கோவையைச் சேர்ந்தது, என்பதை அந்தக் கோவையின் அட்டைப்படத்தை பதிவிறக்கிக்கொண்டே சொல்லிவிடும். இதனால் ஐ-டியூன்ஸ், நீங்கள் இதன் ஊடகமையத்திலிருந்து கோப்புகளைப் பதிவிறக்காவிட்டால் கூட உங்கள் இசை, திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்திச் சேமிக்கும் சிறந்த இடமாக இருக்கிறது.

ஐ-டியூன்ஸ் மிகுந்த வசதிக் குவியலுடன் வருகிறது. ஆனால் அதில் எதுவும் எதையும் சிக்கலாக்கி உங்கள் இரசனைக்குக் குறுக்கே வருவதில்லை. ஐ-டியூன்ஸ் சாதாரண பயனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டது, எனவே அதன் பொத்தான்களையோ அல்லது மற்றத் விருப்பதேர்வுகளைப் பற்றியோ கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. எளிமையாக இதைத் திறந்து . இசையை ரசியுங்கள் அல்லது திரைப்படம் பாருங்கள், அவ்வளவுதான். இதன் மேம்பட்ட வசதிகளைப் பற்றியும் அதிக தந்திரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஊடக மையம் மூலமாக உங்கள் ஓய்வு நேரத்தில் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய பதிப்புகளில் ஐ-டியூன்ஸ் உங்கள் மேகக்கணினி நினைவகங்களில் உள்ள அனைத்து கோப்புகளையும் கூட ஒருங்குபடுத்துகிறது. அதாவது எதிர்பாராத நிகழ்வுகளால் இழப்பு ஏற்படாத வகையில் உங்களது அத்தனைத் தகவல்களையும் நீங்கள் பாதுகாப்பாகக் காப்புப்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஐ-டியூன்ஸ் மூலம் உங்களது அனைத்துச் சாதனங்களுக்கும் உங்களின் அனைத்து ஊடகக் கோப்புகளும் கிடைக்கும். அதாவது உங்களது முழு ஊடக கோப்பு பொக்கிஷங்களும் எங்கேயும் எப்பொழுதும் உங்களுடனே இருக்கின்றன.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


MediaMonkey
MediaMonkey
Foobar2000
Foobar2000
Vox for Mac
Vox for Mac
Wondershare TunesGo for Mac
Wondershare TunesGo for Mac
விளக்கம் இசைத் தொகுப்புகளைக் கட்டி, உருவாக்கி, ஒருங்கிணைக்கிறது. உயர் செயல்பாடுகள் கொண்ட ஒலியியக்கி. பதிவிறக்கம் செய்க Vox for Mac, பதிப்பு 2.9.5 பதிவிறக்கம் செய்க Wondershare TunesGo for Mac, பதிப்பு 9.0
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 0 0 0
விலை $ 0 $ 0 $ 0 $ 49.95
கோப்பின் அளவு 15.49 MB 3.70 MB 19517 KB 20500 KB
Download
Download
Download
Download


ஐ-ட்யூன்ஸ் - iTunes மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு ஐ-ட்யூன்ஸ் - iTunes போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். ஐ-ட்யூன்ஸ் - iTunes மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

ஒரு ஐபாடில் இருந்து இழந்த மற்றும் சிதைந்த கோப்புகளை மீட்கிறது.
Recover iTunes Library iPod பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
ஆப்பிள் சாதனங்கள் இல்லாமல் ஐடியூன்ஸ் கேளுங்கள்.
iTunes Agent பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
இசை மற்றும் அசைபடக் கோப்புகளை நிர்வகிக்கிறது.
 வின்ஆம்ப் - Winamp பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
WAV கோப்புகளை ஐ-பாட் சஃபுள் வடிவிற்கு பாதுகாப்பாக மாற்றுங்கள்.
Free WAV to iPod shuffle Converter பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • ஆப்பிளின் சாதனங்கள், அவை சாளர இயங்குதளப் பதிப்பாக இருந்தாலும் கூட எப்பொழுதுமே ஆர்வமூட்டக்கூடியவை.
  • ஒரு பாட்டை வாங்கி, அதை உடனடியாக இசைப்பது என்பது இதை விட வசதியாக இருக்க முடியவே முடியாது.
  • நீங்கள் இயக்கிகளை மாற்றவில்லை எனில் இயக்கப்பட்டியல்களை இறக்குமதி செய்து கொள்ளலாம்.
  • அளவிற்குட்பட்ட ஆதரிக்கப்படும் வடிவங்கள்.
  • ஓடையாக்கச் சேவை இல்லை.
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users29240)
தரவரிசை எண் இசை மென்பொருட்கள்:1
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:200.00 MB
பதிப்பு:12.7.5.9
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:29/5/2018
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:Apple Inc.
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):6
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):8,983,809

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

Apple Inc. படைப்பாளி பெயர்: : Apple Inc.
Apple Inc. நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 25

பிரபல மென்பொருட்கள்:
1. iTunes 64 bit
2. Safari for Windows
3. ஐ-ட்யூன்ஸ் - iTunes
4. QuickTime Player
5. Mountain lion
25 அனைத்து மென்பொருட்களையும் காண்க

ஐ-ட்யூன்ஸ் - iTunes நச்சுநிரல் அற்றது, நாங்கள் ஐ-ட்யூன்ஸ் - iTunes மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்